Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து கடைகள் தீயில் பாதிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

ஐந்து கடைகள் தீயில் பாதிக்கப்பட்டன

Share:

குவாலா பிலா, மார்ச் 5 -

பான்டார் பாரு சுங்கை பூலோ வில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து சாம்பலானது. இன்று அதிகாலை 3:58 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படைத்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக தெரியவந்துள்ளது.

சுங்கை பூலோ, டாமான்சாரா , கோத்தா அங்கெரிக் ஆகிய தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் உட்பட தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு சென்றதாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படைத்துறையின் உதவி இயக்குநர் அகமாட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

அவ்விடத்தை சென்றடைந்த போது, ஐந்து கடைகள் மொத்தமாக தீயில் எரிந்து கொண்டிருந்ததாகவும் இன்று காலை 6:50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் அகமாட் முக்லிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.

Related News

ஐந்து கடைகள் தீயில் பாதிக்கப்பட்டன | Thisaigal News