May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆசிரியர் பற்றாக்குறை குறித்த பிரச்னை விரைவில் தீர்வு காணப்படும்
தற்போதைய செய்திகள்

ஆசிரியர் பற்றாக்குறை குறித்த பிரச்னை விரைவில் தீர்வு காணப்படும்

Share:

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஓர் அமர்வு முறை முழுமையாக அமல்படுத்துமேயானால் ஆசிரியர்களின் பணிச்சுமை உட்பட ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க முடியும் என்று கல்வி அமைச்சகம் உத்தரவாதம் அளித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கல்வி கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பணித்தன்மை அதிகரிக்கப்படாமல் இருப்பதற்கு இத்தகைய திட்டம் பெரும் பங்காற்றும் என்றார் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ.

பள்ளியில் ஒரு அமர்வை மட்டுமே அமல்படுத்துவது கல்வி அமைச்சகத்தின் எதிர்பார்ப்பாகும். சம்பந்தப்பட்ட பள்ளிகள் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஒரு பள்ளி அமர்வு மட்டுமே செயல்படுத்தப்படும். அது முடியாது என்ற பட்சத்தில் இரண்டு அமர்வுகள் தொடங்கும் என்று வோங் கா வோ இன்று கூறினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னையை கையாள்வதற்கு கல்வி சேவை ஆணையக்குழு (SPP) - வின் மூலம் ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் என்பதுடன் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கற்றல் பட்டப்படிப்பு துறையை மேற்கொள்ள அதிக பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட செய்வதே அடுத்தக்கட்ட முயற்சியாகும் என்றார் அவர்.

Related News