போலீஸ் உதவி ஆணையர்கள் மற்றும் அதற்கு மேல் உயர் பதவிகளில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் மீதான ஊழல் மற்றும் ஒழுங்கீனப் புகார்கள், ‘சுயேட்சை போலீஸ் துறை நடத்தை ஆணையமான ஐபிசிசியின் , தீவிர கண்காணிப்பில் உள்ளதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை எச்சரித்துள்ளார்.
புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பேசிய ஆயோப் கான், மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று வழக்குகள் தற்போது ஐபிசிசி வசம் உள்ளதாகவும், அவற்றின் நிலவரத்தை தாம் நேரடியாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.
போலீஸ் படையினர் இனி உள்துறை ஒழுங்கு நடவடிக்கை பிரிவான ஜேஐபிஎஸ் கண்காணிப்பை மட்டும் நம்பி தப்பிவிட முடியாது என்றும், உள்துறை அமைச்சின் கீழ் உள்ள ஐபிசிசி போன்ற வெளிப்புற அமைப்புகளும் தங்களைக் கண்காணிப்பதை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்க, இத்தகைய புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அயோப் கான் கூறினார்.








