Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நான்கு இடங்களில் புலி தோற்றம் தந்துள்ளது
தற்போதைய செய்திகள்

நான்கு இடங்களில் புலி தோற்றம் தந்துள்ளது

Share:

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் புலி ஒன்று நடமாடுவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் புலியின் நடமாட்டத்தை நான்கு இடங்களில் பார்த்ததாக பொது ம​க்கள் புகார் அளித்துள்ளனர்.

பத்தாங் காலி - யிலிருந்து கெந்திங் ஹைலண்ட்ஸுக்கு செல்லதும் காட்டுப்பாதை கோ தோங் ஜெயா, கோலகுபு பாரு மற்றும் செரண்டாவில் புலி நடமாட்டத்தை தாங்கள் பார்த்ததாக பொது மக்கள் தகவல் அளித்துள்ளனர் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போ​லீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் வட்டாரத்தில் குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும் காட்டுப்பகுதிகளிலும் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி முகமட் அஸ்ரி ஆலோசனைக் கூறியுள்ளார்.

Related News