Johor Bahru, Taman Setia Indah - வில் பிச்சைக்காரர்களாக பணிப்புரிய கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டதாக நம்பப்படும் China - வை சேர்ந்த இரு மாற்றுத்திறனாளிகளை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
நேற்று இரவு 8.30 மணியளவில் அவ்விடத்தில் மேற்கொண்ட Op Pintas அதிரடி சோதனையின் மூலம் இத்தகைய நடவடிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெற்கு Johor Bahru மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Raub Selamat கருத்து தெரிவித்தார்.
இதில் ஓர் உள்ளூர் ஆண் உட்பட 44 மற்றும் 53 வயதுடைய இரு அந்நிய பிரஜைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக Raub Selamat அறிவித்தார்.
மேலும், இந்நடவடிக்கையின் மூலம் 48 வயது உள்ளூர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 14 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் இன்று தகவல் அளித்தார்.








