Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கைதிகள் தப்பிச் சென்றது, நன்கு திட்டமிட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

கைதிகள் தப்பிச் சென்றது, நன்கு திட்டமிட்டுள்ளனர்

Share:

பேரா, பீடோர் குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமிலிருந்து 131 சட்டவிரோதக் குடியேறிகள் நேற்றிரவு தப்பிச்சென்றது, அவர்கள் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு, செயல்படுத்தியிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ மறுக்கவில்லை.

131 தடுப்புக் கைதிகளை பிடிப்பதற்கு போலீஸ் துறை மற்றும் ரேலாவின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டை தற்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் தடுப்பு முகாமின் மூன்றாவது தொகுதியிலிருந்து எட்டாவது தொகுதி வரையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் ஆவார்.

நேற்று இரவு 9.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தடுப்புக்கைதிகள் தப்பிப்பதற்கு தடுப்பு முகாமின் மூன்றாவது தொகுதியில் திட்டமிட்டு இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

கைதிகள் தப்பிச் சென்றது, நன்கு திட்டமிட்டுள்ளனர் | Thisaigal News