Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காரில் போதைப்பொருளுடன் இருவர் கைது
தற்போதைய செய்திகள்

காரில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Share:

பேராக், மே 06-

பேராக், தைப்பிங், ஜாலான் மேடான் சிம்பாங்கில் உள்ள ஒரு காரில் 21 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் 41 வயது மீனவர் மற்றும் 47 வயது உணவக உதவியாளர் ஆகியோரை பேராக் போலீஸ்படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட காரில் சோதனை மேற்கொண்ட போது 262,275 வெள்ளி மதிப்பிலான 46 பிளாஸ்டிக் பொட்டலங்கள் உள்ளடங்கிய 21,037 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 20,000 போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று முகமட் யுஸ்ரி கூறினார்.

கைது செய்யப்பட்ட அவ்விருவரும் மே 9 ஆம் தேதி வரையில் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்