Kelantan, Kampung Belimbing அருகிலுள்ள Jalan Tanah Merah - Pasir Mas - சில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்த வேளை, ஒரு குழந்தை உட்பட 7 பேர் படுங்காயம் அடைந்தனர்.
இக்கோர விபத்தைக் குறித்து நேற்று இரவு 8.53 மணியளவில் தங்களின் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக Tanah Merah, தீயணைப்பு, மீட்புப் நிலையத்தின் செயல்பாட்டு இயக்குநர், மூத்த தீயணைப்பு அதிகாரி II A Kamalhakim Abdul Rahman கூறினார்.
Honda City, Perodua Bezza உட்பட Honda HRV ரக காரும் இவ்விபத்தில் சிக்கியதாக Kamalhakim Abdul தெரிவித்தார்.
Honda City ரக காரில் பயணித்த பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, Perodua Bezza காரில் பயணித்த குழந்தை உட்பட மூவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக Kamalhakim Abdul குறிப்பிட்டார்.
அதே வேளையில், Honda HRV காரில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அவர் மேலும் தகவல் அளித்தார்.








