May 22, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் புத்தாக்க நிறுவனங்களுங்களுக்கு ஊக்கத் தொகை
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் புத்தாக்க நிறுவனங்களுங்களுக்கு ஊக்கத் தொகை

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

மலேசியாவில் உள்ள இலக்கவியல் புத்தாக்க நிறுவனங்களை வளப்படுத்துதற்கு MDEC எனப்படும் மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகத்தின் மூலமாக இலக்கவியல் அமைச்சு, அந்த புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு திட்டத்திற்கு 2 லட்சம் வெள்ளி வரை ஊக்கத் தொகையை வழங்கவிருக்கிறது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.

இந்த சலுகை இரண்டு ஊக்கத் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது Brand Metaverse Onboarding Program மற்றும் Immersive IP Experiences Programe ஆகியவையாகும்.. இது மலேசிய பிராண்டுகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை IP metaverse இல் ஒருங்கிணைக்கப்படுவதை துரிதப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ விளக்கினார்..

Brand Metaverse Onboarding திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த நிறுவனங்கள், மலேசிய பிராண்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிவேக மற்றும் அனுபவமிக்க இயங்கலை உலகத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு ஒரு லட்சம் வெள்ளி வரை ஊக்கத்தொகையை பெறுவதற்கு அணுகலாம்.

இத்திட்டத்தின் நோக்கம், Metaverse- ஸில் உள்ள அனுபவங்கள் மற்றும் சுற்றுச்சூழல்களின் அடிப்படையில் பல்வேறு இலக்கவியல் சொத்துக்கள் உருவாக்கப்படுவதை உள்ளடக்கியதாகும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இன்று கோலாலம்பூரில் MDEC – இன் இலக்கவியல் புத்தாக்கத் தொழில்துறை தின நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய போது அமைச்சர் கோபிந்த் சிங், இந்த ஊக்கத் தொகையை அறிவித்தார். இந்நிகழ்வில் இலக்கவியல் அமைச்சின் துணை தலைமைச் செயலாளர்ம்.ஏ சிவநேசனும் கலந்து கொண்டார்.

Related News

இலக்கவியல் புத்தாக்க நிறுவனங்களுங்களுக்கு ஊக்கத் தொகை | Thisaigal News