Jul 28, 2026
Thisaigal NewsYouTube
TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை
தற்போதைய செய்திகள்

TERENGGANU FC ஆட்டக்காரர் தாக்குதலுக்கு இலக்கானது தொடர்பில் விசாரணை

Share:

கோலா நெருஸ், மே 03-

TERENGGANU FC காற்பந்து விளையாட்டாளரான அக்யார் ராஷிட்டை அடையாளம் தெரியாத இரு நபர்கள் தாக்கியுள்ளது குறித்து, போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கொள்ளையிடும் நோக்கத்திற்காக, 25 வயதுடைய அந்த ஆட்டக்காரர் தாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக, கோலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

ஹரிமாவ் மலாயா விளையாட்டாளருமான அக்யார் ராஷிட், நேற்று இரவு மணி 8.30 அளவில், கோலா நெருஸ், கொங் பாடாக்கிலுள்ள காற்பந்து அரங்கில் பயிற்சிகளை முடித்த பிறகு, தனது வீட்டிற்கு திரும்பிய போது, வாகனத்திலிருந்து வந்திருந்த இருவர் அவரை தாக்கியுள்ளனர்.

அத்துடன், அவரது கைப்பேசி, பணம் முதலானவற்றை உள்ளடக்கிய கைப்பைப் பறித்துக்கொண்டு அவ்விருவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

அந்த தாக்குதலில் அக்யார் ராஷிட்டிற்கு தலை, இடது கால் மற்றும் கைப் பகுதி ஆகியவற்றில் காயங்கள் அஸ்லி முகமது நூர் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்