May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ. 710,000 மின்சார வாகனங்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ. 710,000 மின்சார வாகனங்கள் பறிமுதல்

Share:

முறையான வரிகள் கொண்டிருக்காத 710,000 வெள்ளி மதிப்பிலான மைக்ரோமோபிலிட்டி எனப்படும் மின்சார வாகனங்களை திரெங்கானு, மலேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்தனர்.

கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திரெங்கானு- வில் உள்ள இரண்டு வளாகங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையில் மொத்தம் 147 மின்சார வாகனங்கள் கைப்பற்றபட்டன.

சம்பந்தப்பட்ட வளாகங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட பொருட்களை கொண்டு இயங்கும் மின்சார வாகனங்களை கொண்டிருந்ததால் அவை பறிமுதல் செய்யப்பட்டதாக திரெங்கானு மாநில சுங்கத்துறையின் இயக்குநர் முகமட் நட்ஸ்ரி அரிஃபின் தெரிவித்தார்.

இதில் சந்தேகிக்கும் 39 மற்றும் 37 வயதிற்கு உட்பட்ட இரண்டு வளாகங்களின் உரிமையாளர்களை கைது செய்ததாக முகமட் நட்ஸ்ரி இன்று கூறினார்.

Related News