Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காதலியை 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக லோரி ஓட்டுநர் நாதன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காதலியை 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக லோரி ஓட்டுநர் நாதன் மீது குற்றச்சாட்டு

Share:

ஷா ஆலாம், மார்ச் 8 -

தனது காதலியான தாய்லாந்துப் பெண்ணை ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் 23 ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக ஒரு லோரி ஓட்டுநர், ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது V. நாதன் என்ற அந்த லோரி ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஷாஷா டியானா சப்து முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஷா ஆலாம், செத்தியா அலாம் ,த்ரேபோயில் 2செத்தியா சித்தி என்ற இடத்தில் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஒரு தாய்லாந்துப் பிரஜையான தனது காதலி 32 வயது Mawika Lumyai என்ற பெண்ணை, 23 மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றதாக நாதன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு கால சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் நாதன் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கு விசாரணை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் நாதனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

நாதன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை. வழக்கு விசாரணை வரும் ஜுன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்