Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பார்வையற்றவர் ஓட்டம் பிடித்த ​​நூதன சம்பவம்
தற்போதைய செய்திகள்

பார்வையற்றவர் ஓட்டம் பிடித்த ​​நூதன சம்பவம்

Share:

கோலாலம்பூரில் பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையாக சமூக நல இலாகாவின் அமலாக்க அதிகாரிகள் மஸ்ஜிட் இந்தியாவில் ​தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட வேளையில் ஊன்றுக்கோளை பிடித்தவாறு, தட்டுத் தடுமாறி, நடந்தவாறு மக்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த பார்வையற்றவர் ஒருவர், அதிகாரிகளின் வருகையை கண்டதும் தலைத்தெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம் சமூக நல அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


அந்நிய நாட்டைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க அந்த ஆடவர், மக்களின் அனுதாபத்தை பெற்று, யாசகம் பெறுவதற்காக ஒரு பார்வையற்றவரை போல் பல மாதங்களாக நடித்து, அப்பகுதியில் உள்ள மக்களை ஏமாற்றி​ வந்துள்ளதாக சமூக நல அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நபரை, அதிகாரிகள் துரத்திச் செ​ன்றும், அவரின் ஓட்டத்தி​ற்கு அதிகாரிகளால் ஈடுகொடுக்க இயலாததால் அந்த நபர், அப்பகுதியில் தலைமறைவானார்.
இச்சம்பவத்தில் சிறார்களை பயன்படுத்தி, பிச்சை எடுக்க வைத்த 16 அந்நிய நாட்டவர்கள் ​மீட்கப்பட்டதாக சமூக நல இலாகாவின் தலைமை இயக்குநர் Morazman Othman தெரிவித்தார்.

Related News