Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் விவாதிப்பதா?
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் விவாதிப்பதா?

Share:

துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி லட்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க இயலாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றம் என்பது நீதிமன்றம் அல்ல. நீதிபதிகள் எடுக்கக்கூடிய முடிவுகள் சரியா தவறா என்று சீர்தூக்கி பார்ப்பதற்குரிய பரிபாலனம் அல்ல என்று பிரதமர் விளக்கினார்.

அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட், தாம் எதிர்நோக்கியுள்ள 47 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படாமல், வழக்கிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற முடிவுக்குறித்து சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று பி.கே.ஆர் கட்சியின் இளைஞர் பிரிவு விடுத்துள்ள கோரிக்கைத் தொடர்பில் பிரதமர் கருத்துரைத்தார்.

Related News