Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அது புதிய விஷயம் அல்ல, எம்சிஎம்சி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அது புதிய விஷயம் அல்ல, எம்சிஎம்சி அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.09-

சமூக வலைத்தளங்களில் பெயரின்றி கைப்பேசித் தரவுகளைப் பரிமாறிக் கொள்வது, புதியது அல்ல என்று தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

உலகளாவிய நிலையிலும் இதுதான் நடக்கிறது. இது அத்துமீறல் செயலும் அல்ல என்று அந்த ஆணையத்தின் ஓர் உறுப்பினரான டேரெக் ஜோன் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றில் வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள்,ஒவ்வொரு நாளும் இவ்வாறே செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தனிப்பட்ட ஒருவரின் தரவு தொடர்புடைய விவகாரத்தை மீறியச் செயலாகக் கருத இயலாது என்று அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →