செனாவாங், அக்டோபர்.02
செனாவாங்கில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று 10 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம், பகடி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.
இச்சம்பவம் தற்போதைக்கு தண்டனைச் சட்டம், பிரிவு 507C -இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டெபுடி கமிஷனர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், அப்பள்ளியின் கழிப்பறையில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மாணவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்து விட்டதாகவும் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மாணவரின் மரணத்திற்கான காரணத்தை அறிய இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








