May 22, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அட்டையை தவறாக பயன்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அட்டையை தவறாக பயன்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு

Share:

சட்டவிரோதமாக குடிநுழைவு அட்டையை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக Vietnam - மை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2,800 வெள்ளி அபராதம் விதிக்க Batu Pahat மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

37 வயது Thi Bich Vu என்ற அந்த Vietnam பெண் மாஜிஸ்திரேட் Suhaila Shafi'uddin முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 372B பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த ஜூன் 4 ஆம் தேதி இரவு 10.25 மணியளவில் Johor Bahru, Jalan Maju - வில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News