Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனலுடனான ஜசெக ஒத்துழைப்பு தொடரும்
தற்போதைய செய்திகள்

பாரிசான் நேஷனலுடனான ஜசெக ஒத்துழைப்பு தொடரும்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் பாரிசான் நேஷனலுடன் ஜசெக கொண்டுள்ள ஒத்துழைப்பு, அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் மேலும் பல ஆண்டுகள் தொடரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

தவணைக் காலம் முடிவதற்குள் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தி விடும் என்று 16 ஆவது மாமன்னராக ஆட்சிப்பொறுப்பிலிருந்து இன்று விடைப்பெற்ற மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் ஆலோசனையை ஜசெக மதிப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஒன்றுப்பட்ட பிடியில் இருக்கும் பட்சத்தில் அதன் ஆட்சிக்காலம் முடியும் வரையில் பாரிசான் நேஷனலுடன் தூய உள்ளத்துடன் ஜசெக ஒத்துழைப்பை கொண்டிருக்கும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News