நோன்புப்பெருநாளையொட்டி நாட்டில் உள்ள 33 நெடுஞ்சாலைகளில், 4 நாட்களுக்கு அனைத்து வாகனங்களுக்கும் டோல் கட்டணம் இலவசம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்த நிலையில்,நான்காவது நாளான நாளை ஏப்ரல் 24 ஆம் தேதி திங்கட்கிழமையுடன் இலவச டோல் கட்டணம் ஒரு நிறைவுக்கு வருகிறது என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக, கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கிய இலவச டோல் கட்டணம், நாளை திங்கட்கிழமை ஒரு நாள் மட்டுமே அமலில் இருக்கும் என்று அந்த LLM குறிப்பிட்டுள்ளது.








