Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பொது மன்னிப்பு கோரி நஜீப் விண்ணப்பிப்பார்
தற்போதைய செய்திகள்

பொது மன்னிப்பு கோரி நஜீப் விண்ணப்பிப்பார்

Share:

தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை காலம் 6 ஆண்டுகளாகவும், அபராதத் தொகை 5 கோடி வெள்ளியாகவும் குறைக்கப்பட்ட போதிலும் தமக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், புதிய விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்கப் போவதாக அவரின் முதன்மை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது தொடர்பில் நஜீப் தற்போது மிக ஆழமாக சிந்தித்து வருவதாக ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

. இதன் தொடர்பில் நாட்டின் 17 ஆவது புதிய மாமன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரிடம் புதிய விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று வழக்கறிஞர் ஷாபி கோடி காட்டியுள்ளார்.

Related News