கோலாலம்பூர், மே.05-
சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் தீயணைப்பு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு தனது உயரிய பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அவசரநிலைகளில் தீயணைப்பு வீரர்கள் விரைவாகவும் திறமையாகவும் செயல்படுவதன் மூலம் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றுவது மட்டுமன்றி, நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனையும் தாங்கி நிற்கும் முக்கியத் தூண்களாக அவர்கள் உள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








