May 21, 2026
Thisaigal NewsYouTube
சேவையில் உள்ள போலீஸ்காரர்கள் Ang Pow வாங்கக்கூடாது
தற்போதைய செய்திகள்

சேவையில் உள்ள போலீஸ்காரர்கள் Ang Pow வாங்கக்கூடாது

Share:

சேவையில் உள்ள போலீஸ்காரர்கள் Ang Pow அல்லது பணம் வைக்கப்பட்ட கவர்கூட்டை அன்பளிப்பாக வாங்கக்கூடாது என்று போலீஸ் படைத் தலைவர் தன் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சேவையில் உள்ள போலீஸ்காரர்கள் மாதம் தோறும் சம்பளத்தை பெறுகின்றனர். அவர்கள் சேவையில் இல்லையென்றால், விழா காலங்களில் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் வழங்கக்கூடிய பண அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஐஜிபி தெவித்தார்.

போலீஸ்காரர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் சேவையை தொடங்குவதற்கு முன்னதாக தங்களின் மேலதிகாரியின் விளக்கமளிப்புக்கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் தங்கள் சேவையின் போது SOP நடைமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ரசாருடின் ஹுசெயின் கேட்டுக்கொண்டார்.

Related News