காப்பார், ஜாலான் ஹம்சா அலங் 22 இல் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சுட்டுச் சம்பவம் தொடர்பில் காப்பார் வட்டாரத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டைத் தொடங்கப்பட்டுள்ளதாக ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.
சூடுப்பட்டு இறந்த நபர் போதைப்பொருள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட 12 குற்றச்செயல்கள் பதிவை கொண்டுள்ளதாக விஜயராவ் குறிப்பிட்டுள்ளார்.








