Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட ஆடவர் கைது

Share:

மலாக்கா, மார்ச் 27-

மலாக்காவில் கடந்தாண்டு தொடக்கத்திலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ஆடவரைப் போலீஸ் கைது செய்துள்ளனர்.

பொருள் அனுப்பும் சேவையில் ஈடுபட்டுவரும் 45 வயதுடைய அந்த ஆடவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கி செல்லும் அயெர் கெரோஹ் ஓய்வு தளத்தில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ சய்னால் சாமாஹ் தெரிவித்தார்.

அந்நபரிடமிருந்து 130 ஆயிரத்து 971 வெள்ளி மதிப்பிலான 41.28 கிலோகிராம் கஞ்சா மற்றும் திரத்திலான கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சய்னால் சாமாஹ் கூறினார்.

அவ்வாடவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அந்நபர் போதைப்பொருளை உட்கொண்டிருக்கவில்லை என்பதை கண்டறியப்பட்ட வேளையில் வருகின்ற சனிக்கிழமை மார்ச் 30 ஆம் தேதி வரையில் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக டத்தோ சய்னால் சாமாஹ் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்