Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் வெடிகுண்டு வெடிப்பு; மலேசியாவில் அதிர்வுகள் உணரப்பட்டன
தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் வெடிகுண்டு வெடிப்பு; மலேசியாவில் அதிர்வுகள் உணரப்பட்டன

Share:

ரந்தாவ் பாஞ்சாங், ஏப்ரல் 29-

தாய்லாந்தின் நாராதிவாட் மாநிலத்திலுள்ள குவாலோசிரா என்ற பகுதியில், நிகழ்ந்த வெடிகுண்டு வெடிப்பினால், கொலொக் ஆற்றோர பகுதியிலுள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் அதிர்வுகள் உணரப்பட்டன.

இன்று நள்ளிரவு மணி 1.30 அளவில் திடிரென ஏற்பட்ட வெடிகுண்டு சத்தத்தையும் அதிர்வையும் கண்டு அங்குள்ள குடியிருப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வெடிகுண்டு வெடிப்பு சத்தத்துடன் துப்பாக்கிச் சூட்டு சத்தத்தையும் தாங்கள் கேட்டதாக பொதுமக்கள் சிலர் கூறியுள்ளனர்.

ரந்தாவ் பாஞ்சாங் நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. அந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ரந்தாவ் பாஞ்சாங், கொலொக் ஆற்று பகுதியிலுள்ள பல சட்டவிரோத தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

முன்னதாக, கொலொக் ஆற்றோரத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான காணொளிகளை, மலேசியர்கள் தங்களது முகநூலில் பகிர்ந்திருந்தது பரவலானது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்