Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இலகு ரக விமானம் அவசர தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

இலகு ரக விமானம் அவசர தரையிறக்கம்

Share:

சுபாங், ஏப்ரல் 26-

சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷாஹ் விமான நிலையத்தில் Diamond DA-42 வகையை சேர்ந்த இலகு ரக விமானம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை காலையில் அவசரமாக தரையிறங்கியது. அந்த இலகு ரக விமானத்திலிருந்து அவசர அழைப்பை பெற்ற விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம், அந்த இலகு ரக விமானம் அவசர தரையிறக்கத்திற்கு ஏதுவாக மற்ற விமானங்களுக்கு ஓடு பாதை தற்காலிகமாக ​மூடப்பட்டது.

இரண்டு விமானிகளை உள்ளடக்கிய அந்த இலகு ரக விமானம் காலை சரியாக 8.28 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பின்னரே மற்ற விமானங்கள் தரையிறங்குவதற்கு ஓடுபாதை திறக்கப்பட்டது. அந்த இலகு ரக விமானம் அவசர தரையிறக்கத்திற்கான காரணங்களை போக்குவரத்து அமைச்சின் வான்போக்குவரத்து விபத்து புலனாய்வுப்பிரிவு ஆராய்ந்து வருகிறது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்