Sep 25, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத டீசல் பறிமுதல்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத டீசல் பறிமுதல்: இருவர் கைது

Share:

ஹூத்தான் மெலிந்தாங் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நடத்திய சோதனையில், RM202,211 மதிப்புள்ள டீசல் மற்றும் ஒரு டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய டேங்கர் லாரி ஒன்றைக் கண்காணித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 21,840 லிட்டர் டீசலைக் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சட்டவிரோதச் செயலில் முறையான ஆவணங்கள் இன்றி ஈடுபட்ட 60 வயதுடைய இடத்தின் உரிமையாளரும் 30 வயதுடைய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் பேராக் மாநில இயக்குநர் கமாலுதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் 1974 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related News