Dec 4, 2025
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.டி. ரயில்களக்க சிறப்பு வண்ணம்
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.டி. ரயில்களக்க சிறப்பு வண்ணம்

Share:

வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மலேசியத் தினத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் கிளானா ஜெயா வழித்தடத்திற்கான எல்.ஆர்.டி. ரயில் பெட்டிகள் வண்ணத்தினால் அலங்கரிக்கப்பட்டு, மலேசிய வரலாற்று நாயகர்களின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவில் அமைச்சர் ஃபாமி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

மலேசிய தினம் உருவாக்கம், அதன் பின்னணி ஆகியவற்றை விளங்கும் வகையில் சில துணுக்கு செய்திகளுடன் வர்ணப்படங்கள், எல்.ஆர். ரயில் பெட்டிகளை அலங்கரிக்கும் என்று அமைச்சர் விளக்கினார்.

இதன் மூலம் எல்.ஆர்.டி. பயணிகள் மலேசிய தினத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும் என்று ஃபாமி ஃபட்சில் குறிப்பிட்டார். கிளானா ஜெயா வழித்தடத்திற்கான எல்.ஆர்.டி. ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News