Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலாப் பயணியின் மரணத்தை தொடர்ந்து இரு சுற்றுலாத்தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருகின்றன
தற்போதைய செய்திகள்

சுற்றுலாப் பயணியின் மரணத்தை தொடர்ந்து இரு சுற்றுலாத்தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருகின்றன

Share:

கோப்பெங், ஏப்ரல் 09-

உள்ளூர்வாசியான, சுற்றுலாப் பயணி ஒருவரின் மரணத்தை தொடர்ந்து பேராவிலுள்ள க்சிங் சின் லிங் லெய்சூர் மற்றும் கல்ச்சுரல் வில்லேஜ் ஆகிய இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட நபரை குறித்த முழு அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அவ்விடங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் சிம்பப்பாங் பூளாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் சாய் யீ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பினை அதிகரிக்க தொழில்முறை ஆலோசகர் அறிக்கையை மேற்கொண்டு வருவதாக வோங் சாய் யீ இன்று தகவல் வெளியிட்டுள்ளார்.

குறிப்பிடப்பட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும் என்பதுடன் சுற்றுப்பயணிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் இவ்விடங்கள் தற்போது மூடப்பட்டிருப்பது சிறந்த நடவடிக்கையாகும் என்று வோங் சாய் யீ குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்