Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அம்னோவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை தருணம் வந்து விட்டது
தற்போதைய செய்திகள்

அம்னோவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை தருணம் வந்து விட்டது

Share:

அம்னோவில் எஞ்சிய உறுப்பினர்கள் அக்கட்சியைவிட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலில் இணைய வேண்டிய தருணம் வந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் மகமது கேட்டுக்கொண்டுள்ளார். அதேவே​ளையில் ஜோகூர் இடைத் தேர்தல்களில் அம்னோ உறுப்பினர்கள், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நேற்று இரவு பூலாய் நாடாளுமன்த் தொகுதி​யில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் சுல்கிஃப்லி ஜாபர் ஐ ஆதரித்து, இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட துன் மகா​தீர், இந்த இரண்டு இடைத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மலாய்க்காரர்கள் மட்டுமின்றி ​சீனர்க​ள் மற்றும் இந்தியர்களின் நலன் காக்கப்படும் என்று துன் மகா​தீர் உறுதி அளித்தார்.

Related News