நாட்டில் மிகப்பெரிய மொத்த வியாபார சந்தை நகரமான GM Klang Wholesale City,, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி The Kiddos Zone Party 2023 எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
குடும்பத்தினருடன் மக்கள, GM Klang கிற்கு வருகை தருவது மூலம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விழா கால நிகழ்வுதான் Kiddos Zone Party 2023.
சிறார்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பல்வேறு நடவடிக்கைகளிலும், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது மூலம் அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை இது ஏற்படுத்துகிறது.
இந்நிகழ்வு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் இரண்டு தினங்களான டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் GM Klang Wholesale City, கீழ் மாடி, Atrium தளத்தில் நடைபெறவிருக்கிறது.
இதேபோன்று டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கி, 31 ஆம் தேதி வரை GM Klang, Wholesale City யில் பொருட்களை வாங்குவது மூலம் ஆச்சரியப்படத்தக்க சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன.
இந்த விழா கால சிறப்பு பிரச்சாரக் காலத்தில் GM Klang, Wholesale City யில், இடம் பெற்றுள்ள கடைகளிலும், GM Klang வர்த்தக சமூகத்தின் செயலி பதிவிறக்கத்திலும் குறைந்த பட்சம் 150 வெள்ளிக்கு பொருட்களை கொள்முதல் செய்வதன் மூலம் வியக்கத்தக்க பரிசுகளை பெறுவதற்கான வாய்ப்புகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
தவிர, குழந்தைகளுக்கான புத்தாக்கம் நிறைந்த அற்புதமான DIY பட்டறைகள், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், விடுமுறை கருப்பொருளை உள்ளடக்கிய பொழுதுபோக்கு அம்சங்கள், கிறிஸ்துமஸ் Carol, Mascot – களுடன் சந்திப்பு மற்றும் GM Klang, Wholesale City யின் அதிகாரப்பூர்வ Mascot – களான Santa Clause, Gina,Mat ஆகியவற்றின் வாழ்த்துகளை பெறலாம்.








