Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்
தற்போதைய செய்திகள்

தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரம்; சக தொழிலாளியைக் கொன்ற ஆடவர்

Share:

ஷா அலாம், மார்ச் 20 -

நோன்பு துறப்பின் போது, தனது ஆரஞ்சு பானத்தை அறுந்தியதால் ஆத்திரமடைந்த பாக்கிஸ்தானிய ஆடவர் ஒருவர், சக தொழிலாளியான வங்காளதேச ஆடவரை கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலாங்கூர், ஷா அலாம் செக்‌ஷேன் 36இல் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்ட கொள்கலனில் நேற்று மாலை மணியளவில், அச்சம்பவம் நிகழ்ந்தது.

இரவு மணி 7.30 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் 51 வயதுடைய ஆடவரைக் கைது செய்தனர்.

தனது ஆரஞ்சு பானத்தை 49 வயது வங்காளதேச ஆடவர் அறுந்தியதால், ஆத்திரமடைந்த அவர், சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு அவ்வாடவரை குத்தியுள்ளார்.

விசாரணையில் அவ்விருவரும் ஓரிடத்தில் வேலை செய்து வருவதும் ஒன்றாக தங்கியிருப்பதும் உறுதி படுத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் மொகமாட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்