Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் ஐவருக்கு ஒரு நாள் சிறை
தற்போதைய செய்திகள்

போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் ஐவருக்கு ஒரு நாள் சிறை

Share:

போலி மருத்துவ விடுப்பு சான்றிதழை பயன்படுத்தி ஏமாற்றியதாக கணவன், மனைவி உட்பட ஐவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், தலா 1,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் நிறுத்தப்பட்ட குடும்ப மாதுவான 28 வயது D. Carolina, அவரின் 28 வயது கணவர் TD வாசுதேவன் மற்றும் 28 வயது ஜி. முகுந்தன், 27 வயது எம். ஹரிவிந்தன், 43 வயது ஆர். கோபிநாத் ஆகிய ஐவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி Zulhazmi Abdullah தெரிவித்தார்.

இவர்களில் காரோலினா மற்றும் அவரின் கணவர் வாசுதேவன் ஆகியோருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த ஐவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை தாங்கள் பணிபுரியும் ஜார்ஜ் டவுன் மற்றும் பயான் லெப்பாஸில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News