May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சாதனங்களை வைத்திருந்ததாக பெண் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சாதனங்களை வைத்திருந்ததாக பெண் மீது குற்றச்சாட்டு

Share:

பினாங்கு, மே 28-

102 பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சாதனங்களை வணிக வளாகத்தில் வைத்திருந்ததாக பெண் ஒருவர் பாலிக் புலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

29 வயது சாரா ஃபூன் என்கிற அந்த வணிக பெண், மாஜிஸ்திரேட் சியா ஹூய் டிங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று வருடங்கள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 292(a) பிரிவின் கீழ் அப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பினாங்கு, பெர்சியரான் பயான் இண்டா - வில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related News