இரண்டு வாரங்களுக்கு முன்பு, சக நாட்டைச் சேர்ந்த ஒருவரை வெட்டி கொலை செய்ததாக வங்காளதேச ஆடவர் ஒருவர், கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
Mohammad மொகுல் ஹுசெயின் என்ற 34 வயதுடைய அந்த வங்காளதேச ஆடவர், கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 8 மணியளவில் லெங்கோங், ஜாலான் குவாக், பெக்கான் குவாக் என்ற இடத்தில் வாழைத் தோட்டத்தில் ஹொஸ்ஸென் முஹமாட் மொனோவார் என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் முஹமாட் சஸ்மீர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த வங்காளதேசியிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. வழக்கில் வங்காளதேச மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


