Jul 28, 2026
Thisaigal NewsYouTube
12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

12 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த சிறுவன் மரணம்

Share:

செராஸ், மார்ச் 8 -

செராஸ் சில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 12 ஆவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.

நேற்று மதியம் 1:52 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை குறித்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் சுப்ரின்டென்டன் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.

அவ்விடத்தில் 12 வயதிற்கு உட்பட்ட உள்ளூர் சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழே உள்ள புல்வெளியில் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை கண்டறிந்ததாக ரிட்சுவான் காலிட் கூறினார்.

பிறகு அந்த சிறுவன் உயிரிழந்ததை கென்சேலர் துவாங்கு முக்ரிஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்ததாக ரிட்சுவான் காலிட் நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இது திடீர் மரணமே என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்