Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கனரக குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கனரக குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி

டெக்ஸஸ், நவ. 16-


சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொழில்முறை கனரக குத்துச்சண்டைக்கு திரும்பிய முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், இன்று அமெரிக்கா, டெக்ஸஸ், அர்லிங்டன் அரங்கில் நடைபெற்ற குத்துச் சட்டையில் இளம் வீரரான யூ டியுப் பிரபலம் ஜேக் பாலிடம் தோல்விக் கண்டார்.

மொத்தம் எட்டு சுற்றுக்களை கொண்ட இந்த கனரக குத்துச்சண்டைப் போட்டியில் 79 – 73 என்ற புள்ளிக்கணக்கில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார்.

எதிராளியை காதைக்கடிப்பது, பாலியல் பலாத்காரம், போதைப்பொருள் பழக்கும் போன்றவற்றினால் குத்துச்சண்டையில் பங்கேற்காமல் கடந்த 20 ஆண்டு காலமாக ஒதுக்கியிருந்த மைக் டைசன், தனது முழு பலத்துடன் கோதாவில் குதித்து யூ டியூப் பிரபலம் ஜேக் பாலை சரமாரியாக குத்தினார்.

டைசனின் முதல் இரண்டு குத்துக்களில் ஜேக் பால் சற்று தடுமாறிானர். ஆனால், நேரம் செல்ல, செல்லல ஜேக் பாபாலின் சரமாரியான குத்துக்களை சமாளிக்க முடியாமல் 58 வயதுடைய டைசன் நிலைத்தடுமாறி, நிலைக்குலைந்துப் போனார்.

இதுவரையில் கோதாவில் குதித்து விளையாடிய 11 கனரக குத்துச்சண்டைப்போட்டியில் பத்து முறை வெற்றிப்பெற்றவரும், 7 முறை நாக் – அவுட் முறையில் வெற்றி பெற்றவருமான 27 வயது, ஜேக் பால். டைசனுடான மோதலில் வெற்றியாளராக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் அறிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →