May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இராணுவ வீரர் உட்பட அவரின் மனைவி உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இராணுவ வீரர் உட்பட அவரின் மனைவி உயிரிழந்தனர்

Share:

முசாங் குகை - லோஜிங் சாலையின் 43 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இராணுவ வீரரும் அவரின் மனைவியும் உயிரிழந்த வேளை, அவர்களின் இரு குழந்தைகளும் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

43 வயது ரித்வான் எஃபெண்டி யூசப் என்ற அந்த இராணுவ வீரர் மற்றும் அவரின் மனைவி 37 வயது சுஹானா கைருதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாகவும் அவர்களின் குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

இன்று காலை 9.35 மணியளவில் Ipoh - விலிருந்து Gua Musang - கிற்கு அவர்கள் காரில் பயணித்த வேளை, இவ்விபத்து நிகழ்ந்திருப்பதாக சிக் சூன் ஃபூ மேலும் குறிப்பிட்டார்.

Related News