Mar 16, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல்

Share:

சம்மன்களுக்கு கட்டண கழிவு கொடுப்பதாக கூறி, பிரிட்டிஷ் பிரஜையிடம் லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் போக்குவரத்து பிரிவை சேர்ந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ்காரர் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் கடந்த ஞாற்றுக்கிழமை Ipoh, Jalam Simpang Pulai – Cameron Highlands சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் Mohd Yusri Hassan Basri தெரிவித்தார்.

37 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று போலீஸ்காரர்கள் 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் ஆணைய தடுப்புச் சட்டம் மற்றும் தொடர்புத்துறை, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக . Mohd Yusri Hassan குறிப்பிட்டார்.

Related News

லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ்காரர்களுக்கு தடுப்புக்காவல் | Thisaigal News