Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பூனைக் குட்டிக்கு தீமூட்டிய 3 ஆடவர்கள் தேடப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

பூனைக் குட்டிக்கு தீமூட்டிய 3 ஆடவர்கள் தேடப்படுகின்றனர்

Share:

காஜாங், ஏப்ரல் 24-

சிலாங்கூர், காஜாங், சுங்கை ரமால் பாரு-விலுள்ள ஸ்ரீ கெனாரி அடுக்குமாடி குடியிருப்பில் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்துமிடத்தில் பூனைக் குட்டி ஒன்றுக்கு தீமூட்டிய 3 ஆடவர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.

நேற்று மதியம் 1 மணி அளவில் நிகழ்ந்துள்ள அச்சம்பவம் குறித்து 63 வயதுடைய மாது போலீசில் புகார் அளித்ததை அடுத்து, போலீஸ் அந்த இடத்திலுள்ள CCTV கேமரா பதிவை ஆராய்ந்த போது, அவர்களின் அச்செயல் அம்பலமானதாக, காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஜயித் ஹாசன் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் சுற்றித்திரிந்த மூவரில் இருவர், பூனைக்குட்டியின் மீது எரிபொருளை ஊற்றியதோடு, தீமூட்டியுள்ளனர். உடலில் தீப்பற்றிய நிலையில், அந்த பூனைக்குட்டி அவ்விடத்திலிருந்து ஓடியுள்ளது. அங்கிருந்த குடியிருப்பாளர் ஒருவர், அந்த பூனைக் குட்டியின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்ததாக முகமது ஜயித் கூறினார்.

உடல் பலவீனமாகி கிடந்த அந்த பூனைக் குட்டியை மீட்பதற்கு புகாரளித்திருந்த மாது, அம்பாங்கிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார்.

இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் வேளை, பூனைக் குட்டிக்கு தீமூட்டியவர்களை தேடி பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக ஜயித் ஹாசன் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்