பழைய போலி நாணயங்கள், நாட்டின் வரலாற்றின் உண்மையான தகவல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அவற்றை அதிக விலை கொடுத்து வாங்குகின்றவர்களுக்கே இழப்பை ஏற்படுத்தும் என்று மலேசிய பழைய நாணங்கள் சேகரிப்பாளர் சங்கத்தின் ஆய்வாளர் டாக்டர் ஜிஷாம் அவாங் தெரிவித்துள்ளார்.
பழங்கால நாணயங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான மதிப்பும் வரலாறும் உண்டு. ஆனால், அதே மாதிரியான போலி நாணயங்களை தயாரிக்கின்றவர்கள் குறுகிய காலத்தில் கொள்ளை லாபத்தை ஈட்ட முடியுமே தவிர பழம் பெருமைகளை எடுத்துரைப்பதற்கு அவற்றை ஒரு சான்றாக பயன்படுத்த முடியாது என்று டாக்டர் ஜிஷாம் அவாங் எச்சரிக்கிறார்.









