Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தப்பி ஓடிய 131 கைதிகளில் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

தப்பி ஓடிய 131 கைதிகளில் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்

Share:

பேரா, பிடோரில் தற்காலிக குடிவரவுக் கிடங்கில் இருந்து 131 சட்டவிரோத குடியேற்றக் கைதிகள் தப்பிச் சென்றதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

115 Rohingya ஆண்களும் 16 மியான்மார் ஆண்களும் தப்பித்து ஓடியதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் யுஸ்ரி ஹாஸ்ஸான் பஸ்ரி கூறினார்.

தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவர் பிடோர் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 335 ஆவது கிலோமீட்டரில் சாலை விபத்தில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

பிடோரின் 3 ஆவது Batalion பொது நடவடிக்கைப் படையின் உறுப்பினர்கள், பேரா போலீஸ்படை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை, புக்கிட் அமான் ஜே.எஸ்.ஜே ஆகியோர் மீதமுள்ள 130 கைதிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளோம் என்பதாக இன்று முஹமாட் யுஸ்ரி கூறினார்.

Related News