முறையாக நாட்டின் ஆர்.ஓ.சி. எனப்படும் நிறுவன பதிவு இலாகாவிடம் பதிவிடப்படாத நிறுவனங்களினாலும் அதிகாரப்பூர்மற்ற குற்றச் செயல்களினாலும், ஒவ்வொரு ஆண்டும் நாடு ஏறக்குறைய 70 பில்லியன் வரி பண வருமானத்தை இழந்துள்ளது என உள்நாட்டு வரிப்பண வாரியத்தின் சிறப்பு தலைவர், டத்தோ டாக்டர் முகமட் நிசாம் சைரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்படுகின்ற பொருட்கள் கள்ள கடத்தல், போலீயான கடப்பிதழ் தயாரித்தல், பாலியல் தொழில், சூதாட்டங்கள் போன்ற பதிவு செய்யப்படாத வியாபாரங்களினால் இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார். மேலும், பதிவு செய்யபடாமல் இணையத்தின் வழி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படாத ரொக்கப் பணம் வழி வியாபாரங்களினால் நாட்டிற்கு வருடம் தோரும் 70 பில்லியன் இழப்பு ஏற்படுவதாக அந்தத் தலைமை அதிகாரி தெரிவித்தார்.








