கோலாலம்பூர், நவம்பர்.20-
தமக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட தாக்குதல் அளிக்கப்பட்டு வருவதாக ஜசெக.வின் புக்கிட் பெண்டேரா எம்.பி. ஷேர்லீனா அப்துல் ரஷிட் குற்றஞ்சாட்டினார்.
தனக்கு எதிராக டிக் டாக்கில் உண்மைகளைத் திரித்தும், வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையிலும் பல காணொளிகள் பகிரப்பட்டு வருவதுடன், இது திட்டமிட்டட தனிப்பட்ட தாக்குதல்களாகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஷேர்லீனா தெரிவித்தார்.
அரசியல் அரங்கில் ஒரு முஸ்லிம் பெண்ணாக தனது தோற்றத்தை இழிவுப்படுத்துவதற்கு அவதூறான தகவல்கள் பகிரப்படுவதுடன் மத உணர்வு மற்றும் பாலின ஸ்டிரியோடைப்புகளைப் பயன்படுத்தி, உள்ளடக்கம் உருவாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இது தனது ஆளுமை மீதான தாக்குதல் மட்டுமல்ல, மலேசியர்கள் எப்போதும் போற்றி வரும் பழக்க வழக்கங்கள், கண்ணியம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் மீதான தாக்குதல்களாகும் என்று ஷேர்லீனா தெரிவித்தார்.








