Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மோனோரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

நான்கு மோனோரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மே 08-

கோலாலம்பூர் மாநகரில் மிக பரபரப்பான சாலையான ஜாலான் சுல்தான் இஸ்மாயிலுள்ள பகுதியில் கோன்கோர்ட் ஹோட்டல் முன்புறம் ராட்ஷச மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்த சம்பவத்தை தொடர்ந்து துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நான்கு மோனேரேல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் பயணிகளின் பயணங்களை சீராக வழிவகுத்திட மாற்றுச் சேவையை பொதுமக்களுக்கு அமல்படுத்திருப்பதாக ரேப்பிட் ரயில் Sdn Bhd நிறுவனம் ஓர் அறிக்கையில் இன்று அறிவித்துள்ளது.

மோனோரல் புக்கிட் நானாஸ், மோனோரல் ராஜா சூலான், மோனோரல் புக்கிட் பிந்த்தாங் உட்பட மோனோரல் இம்பி ஆகிய நான்கு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், மாற்று சேவையை பயன்படுத்தி பயணிகள் தங்களின் பயணத்தை தொடருவதற்கு பாதிக்கப்பட்ட நிலையங்களுக்கிடையே இலவச பேருந்து சேவையை வழங்கியிருப்பதாக ரேப்பிட் ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்