தேசிய தின மாத கொண்டாட்டத்தை மெரு கூட்டும் பொருட்ட செமூர், கெலெபாங் ரெஸ்து தபிக்கா பிஜா பெர்ஜயா மழலையர் பள்ளியைச் சேர்ந்த 70 மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வண்ணம் வாகனங்கள் நெரிசல் மிகுந்த கெலெபாங் ரெஸ்து பிரதான சாலையில் ஊர்வலமாக நடந்து, தேச பற்றை வெளிப்படுத்தினர்.
மாணவர்கள் தேசிய கொடியை அசைத்துக் கொண்டே சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் நடந்து சென்றது, அச்சாலையை பயன்படுத்திய வாகன மோட்டிகளுக்கு பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.
சிறார்களின் இந்த தேசப்பற்றுக்கு வாழ்த்துக்கூறும் விதமாக அவர்கள் தங்கள் வாகனங்களில் ஹோன் ஒலியை எழுப்பி, தங்கள் அன்பையும், ஆதரவையும் புலப்படுத்தினர்.
விஜேய் லட்சுமி சேகர் வடிவேல் என்பவரால் வழி நடத்தப்படும் இந்த மழலையர் பள்ளியின் மாணவர்கள் ஒன்றிணைந்து மறு சுழற்சிக்கான பழைய டின்கள் மற்றும் போட்டல்களை கொண்டு, மாதிரி இரட்டை கோபுர உருவமைப்பை வடிவமைத்தது பொது மக்களை வெகுவாக கவர்ந்ததுடன் அவர்களின் இந்தப் புத்தாக்கத்திறனை வெகுவாக பாராட்டினர்.








