Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வட்டாரத் தகவல்களை தவிர்க்குமாறு அமைச்சர் ஆலோசனை
தற்போதைய செய்திகள்

வட்டாரத் தகவல்களை தவிர்க்குமாறு அமைச்சர் ஆலோசனை

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தொடர்புடைய பொது மன்னிப்பு விவகாரத்தில் நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil கேட்டுக்கொண்டார்.

தற்போது 12 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்கும் விண்ணப்பத்தை மன்னிப்பு வாரியம் அங்கீரித்துள்ளதாக மலாய் நாளேடு ஒன்று தனது அகப்பக்கத்தில் செய்தி வெளியிட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் Fahmi Fadzil மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கினார்.

நஜீப் பொது மன்னிப்பு விவகாரத்தில் நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டுவதற்கு முன்னதாக தங்களுக்கு கிடைத்த தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளுமாறு ஊடகவியாளர்களுக்கு Fahmi Fadzil ஆலோசனைக் கூறினார்.

Related News