Jun 22, 2026
Thisaigal NewsYouTube
ம.இ.கா. கல்வி, விளையாட்டுத் துறைகளின் பங்களிப்பில் இந்திய இளைஞர்கள் சாதிக்க வேண்டும்: அர்விந்த் அப்பளசாமி
தற்போதைய செய்திகள்

ம.இ.கா. கல்வி, விளையாட்டுத் துறைகளின் பங்களிப்பில் இந்திய இளைஞர்கள் சாதிக்க வேண்டும்: அர்விந்த் அப்பளசாமி

Share:

கல்வி, கல்வி, விளையாட்டுத்துறைகளில் இந்திய இளைஞர்கள் சாதனைப் படைக்க வேண்டும் என்று பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு துணைத்தலைவர் அர்விந்த் அப்பளசாமி கேட்டுக்கொண்டார்.

மஇ.கா.வின் 80-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பேரா, பாகான் டத்தோ சன்மார்க் சங்க மண்டபத்தில் நடைபெற்ற ‘டான்ஸ்ரீ எஸ்.

ஏ. விக்னேஸ்வரன் கிண்ண’ விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பேரா மாநில ம.இ.கா. இளைஞர் பிரிவு துணைத்தலைவர் அர்விந்த் அப்பளசாமி உரையாற்றினார்.

எதிர்பார்த்ததை விட இருமடங்கு பல்லின அணிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் ரொக்கமும் வழங்கப்பட்டன. மேலும், விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 55 பேருக்கு உயரிய அங்கீகாரமும் பாராட்டும் வழங்கப்பட்டது.

ம.இ.கா தேர்தல் காலங்களில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல; அரசாங்கப் பொறுப்புகள் இல்லாவிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று மக்கள் சேவை ஆற்றி வருவதாக அர்விந்த் குறிப்பிட்டார்.

சந்தோஷ் சிங், ஆறுமுகம் போன்ற ஜாம்பவான்களின் பொற்காலத்தை மீட்டெடுக்க இளைஞர்களுக்குப் போட்டி வசதிகளையும் பயிற்சிகளையும் ம.இ.கா வழங்கி வருகிறது. கல்வியிலும் விளையாட்டிலும் மாணவர்கள் சாதிக்கத் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகக் கூறிய அர்விந்த், ம.இ.கா ஓர் ஆலமரம் போன்றது; அதன் நிழலில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வளர வேண்டும் என்பதே நோக்கம் எனத் தெரிவித்தார்.

பகான் டத்தோ வட்டாரத்தில் அர்விந்த் அப்பளசாமியின் முன்னெடுப்பில் இது போன்ற போட்டி விளையாட்டுகளை முன்னெடுப்பது, இளையோர்கள் தவறான வழியில் செல்வதை தடுப்பதற்கு பெரும் பங்காற்றும் என்று புட் சால் போட்டி விளையாட்டில் பங்கேற்ற சிம்பாங் அம்பாட், 11 பாய்ஸ் குழுவின் தலைவர் விக்னேஸ்வரன் சிவஞானம் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் பல்லின ஒற்றுமைக்காகவும் ம.இ.கா. தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருவதை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கல்வியிலும் விளையாட்டிலும் நம் இந்திய சமுதாயம் ஆலமரமாய் தழைத்தோங்க கட்சி என்றும் ஒரு முக்கியத் தூணாக விளங்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது போட்டி விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள் ஒரு சேர தெரிவித்தனர்.

Related News

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

புடி மடானி திட்டம்: மாதத்திற்கு 200 லிட்டர் மானிய விலை டீசல் வழங்க அரசாங்கம் முடிவு

புடி மடானி திட்டம்: மாதத்திற்கு 200 லிட்டர் மானிய விலை டீசல் வழங்க அரசாங்கம் முடிவு

ஊடகங்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியப் சகாக்கள் : துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் நெகிழ்ச்சி

ஊடகங்கள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியப் சகாக்கள் : துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் நெகிழ்ச்சி

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா: ஜூன் 24 முதல் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலத் தொடக்கம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா: ஜூன் 24 முதல் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலத் தொடக்கம்

ஏஐ பயிற்சியை இலவசமாக வழங்கியது பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம்

ஏஐ பயிற்சியை இலவசமாக வழங்கியது பூச்சோங் நாடாளுமன்ற அலுவலகம்