Jul 16, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

Share:

கோலாலம்பூர் இஸ்தானா புக்கிட் துங்குவில், ஜோகூர் இளவரசரும், இடைக்கால சுல்தானுமாகிய துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சுமுகமான சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜோகூர் மாநில மக்களின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

மடானி அரசாங்கத்தின் தொடர் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட வேளையில், மத்திய அரசாங்கம் மற்றும் ஜோகூர் மாநில அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான உறவையும் கூட்டுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் அன்வார் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News