செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் துறைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் மறுபயிற்சி அளிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற 'ஃபைடே ஃபாரம்' அறிக்கை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு பேசிய அமைச்சர் கோபிந்த் சிங் , புதிய தொழில்நுட்பங்களால் சில வேலைவாய்ப்புகள் மாறக்கூடும் என்பதால், தொழிலாளர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள இந்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.
ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் வழி திறமையாளர்களை உருவாக்கும் உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு 'ஏஐ நாடாக' மாற்றுவதே இதன் முதன்மை இலக்காகும் என்றும் அமைச்சர் கோபிந்த் சிங் விவரித்தார்.








